தீபாவளியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு மறு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இதனை கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து இன்று (17) வெளியிடப்பட்ட கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பதில் பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமை இடம் பெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








