Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு

இலங்கை இராணுவத்தால் 76 பயனற்ற வாகனங்கள் புனரமைப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை இராணுவத்தால் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் இருந்த 76 வாகனங்களை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் பணிப்புரைக்கமைய புனரமைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வாகனங்கள் நேற்று (24) முதல் மீண்டும் இராணுவத்தின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக அமுல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட இந்த வாகனங்களை மீண்டும் இராணுவ சேவைக்கு இணைத்துக் கொள்வதன் மூலம், இராணுவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் அதிகளவான வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க முடிந்துள்ளது.

அத்துடன், இந்த வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம், வாடகை அடிப்படையில் இராணுவத்தால் பெறப்பட்ட வாகனங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு சேமிக்க முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மூலம் அமுல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், ட்ரக் வாகனங்கள், பேருந்துகள், நீர் பவுசர்கள், யூனி பஃபல் வாகனங்கள், கெப் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள், வேன்கள் மற்றும் கழிவு பவுசர்கள் (Gully Bowsers) உள்ளிட்ட 76 வாகனங்கள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

யாழில் பொலிஸ் துப்பாக்கி பிரயோகம்; இளைஞன் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு