நேற்றைய தினம் (27) வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) காணப்பட்ட நிகழ்வானது, இன்று காலை தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளதுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை ஆந்திர கரையை ஊடகத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இன்று காலை 05.30 மணிக்கு இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில்,
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணிக்கு 50km/h _ 60km/h வேகத்தில் இடையிடையே சற்று பலமான காற்று வீசக்கூடும்.








