Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

தனது முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் வழங்க மறுத்த செங்கலடி பிரதேச சபை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்காக தமது வாழ்நாள் பங்கினை அர்ப்பணித்து பணியாற்றிய முன்னாள் ஊழியரின் இறுதிக்கிரியைக்கு மின்குமிழ் (Street Light) வழங்குவதற்கு செங்கலடி பிரதேச சபை மறுத்த சம்பவம் அப் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் (28) உயிர்ழந்த முன்னாள் ஊழியர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்று பிரதேச சபையின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளில் தனது பங்களிப்பை வழங்கியவர் எனக் குறிப்பிடப்படுகிறது. அவர் குறித்த தினத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்நிலையில் இரவு நேரங்களில் நிகழும் இறுதி சடங்கு மற்றும் இருளைத் தவிர்க்கும் ஒளியூட்டும்வகையில் பிரதேச சபையிடம் மின்குமிழ் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், பிரதேச சபை அதனை வழங்க மறுத்ததோடு, தங்களிடம் போதிய மின்குமிழ் இல்லை என்றும் ‘இது அதிகாரபூர்வ அனுமதி பெறாத கோரிக்கையாகும்’ எனக் காரணம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னாள் ஊழியரின் குடும்பத்தினர் மற்றும் அவரரது பொதுமக்கள் கடும் மன வேதனையைத் தெரிவித்துள்ளனர். ‘செங்கலடி பிரதேச சபைக்காக தன்னலமின்றி பல வருடங்கள் உழைத்த ஒருவரின் இறுதிக்கிரியைக்குக் கூட சிறிய ஒளியை வழங்கத் தயங்குவது மனிதாபிமானமற்ற செயல்’ என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், சில உள்ளூர் அமைப்புகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, பிரதேச சபை நிர்வாகம் எதிர்காலத்தில் இதுபோன்ற அநீதிகள் நடைபெறாமல் உறுதிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன.

சமூக வலைத்தளங்களிலும் இந்தச் சம்பவம் தீவிரமான விவாதத்துக்குள்ளாகி ‘மனிதாபிமானத்தை விட அதிகாரபூர்வ நடைமுறைகள் மேலோங்கும் நிலைமையைச் சீர்செய்ய வேண்டும்’ என்ற கருத்துக்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
செய்திகள்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!

November 22, 2026
உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!
செய்திகள்

உலகில் அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம்!

November 22, 2026
பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு
அரசியல்

பணிப்புறக்கணிப்புக்கு மக்களின் ஆதரவு கிடையாது; ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் நாட்டைச் சீரழிக்க முயற்சி – எம்.பி. கந்தசாமி பிரபு

November 22, 2026
லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

லண்டனில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை!

November 22, 2026
யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!
செய்திகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் மோதல்: 21 பேர் விளக்கமறியலில் – உள்ளக விசாரணையும் ஆரம்பம்!

November 22, 2026
சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!
செய்திகள்

சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!

November 22, 2026
Next Post
தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பில் மூவர் கைது; ரூ.4 இலட்சம் பெறுமதியான கஞ்சா பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு