Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

பாடசாலை நேர அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்; அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே.

2023 ஆம் ஆண்டு மாறவேண்டிய பாடத்திட்டம் மாறவில்லை அந்த வகையிலேயே 2026 ஆம் ஆண்டுக்காக இந்த பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் யோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளாவிய ரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர் இடமாற்றம் குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆசிரியர்களும் நாங்களும் இணைந்து வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தோம்.

குறித்த வழக்கு நேற்று எடுக்கப்பட்டது. கல்வி அமைச்சு இதற்கு பதிலளிக்க காலத்தை கேட்டிருக்கிறது 11ஆம் மாதம் 24 ஆம் திகதி இந்த வழக்கு 3 தவணைக்காக போடப்பட்டிருக்கிறது.

இடமாற்றம் சம்பந்தமாக ஆசிரியர்களுக்கோ அதிபர்களுக்கோ நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? கல்வி அதிகாரிகள் தான் இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இடமாற்றம் காரணமாக பல பிரச்சினைகள் இருந்தது. ஆசிரியர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டார்கள்.

ஒரு போராட்டம் தொடர்பிலும் ஆளுநர் தனது கவனத்தை செலுத்தவில்லை. மாகாண சபை இல்லை. இங்கு ஆளுநரின் வழிநடத்தலில் நிர்வாகம் நடைபெறுகிறது.

ஆளுநரின் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்ற போதும்கூட ஆசிரியர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் ஆளுநர் பின் கதவால் தப்பிச் சென்றார்.

எங்கள் உரிமைகளுக்காக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்திருக்கிறோம்.

வடக்கு மாகாண கல்வி சம்பந்தமாக பல பிரச்சனைகள் உருவாகி இருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும் ஜனநாயக ரீதியாக இங்கு செயல்பாடுகளை காணவில்லை. ஆளுநர் என் பி பி அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆளுநர் பதவி என்பது என்.பி.பி அரசுக்கு சொந்தமான பதவி அல்ல. அது பொதுவான பதவி.

இந்தப் பிரச்சினைகளை கண்டித்து டிசம்பர் 12ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.நாடளாவிய ரீதியில் இந்த போராட்டம் செய்யப்படவுள்ளது.

புதிய சீர்திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இந்த கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் கல்வி திருத்தமாக பார்க்கவில்லை. இது ஒரு பாட திருத்தமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

ஏழரை மணியில் இருந்து ஒன்றரை மணி நேரம் இருந்த பாடசாலை நேரத்தை இரண்டு மணி வரை மாற்றியுள்ளார்கள். இதை யாருடன் பேசி செய்தார்கள். ஆசிரியருடன் பேசினார்களா? அதிபர்களுடன் பேசினார்களா? தொழிற்சங்கங்களுடன் பேசினார்களா? தன்னிச்சையாகவர்கள் தீர்மானித்துள்ளார்கள்.

அடுத்த வருடம் முதலாம் ஆண்டுக்கும் ஆறாம் ஆண்டுக்கும் இந்த கல்வி சீர்திருத்தம் இருக்கின்றது. ஏழாம் ஆண்டிலிருந்து 13 ஆம் ஆண்டு வரை கல்வி சம்பந்தமாக பழைய பாடத்திட்டமே காணப்படும். இது ஒரு ஆயத்தம் இல்லாத செயற்பாடு.

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கும் வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்திற்கும் ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டு என எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கோரி

வருகின்ற 12ஆம் மாதம் 12ஆம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம் – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.