Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

மட்டக்களப்பில் மனிதர் பயன்பாட்டிற்கு உதவாத 1,900 கிலோ தேங்காய் எண்ணெய் பறிமுதல்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மனித பயன்பாட்டிற்கு உதவாத தேங்காய் எண்ணெயை கொண்டு வந்த நபர் ஒருவரை, இன்று (15) பகலில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1,900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த கன்டர் ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஈ. உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, காந்தி பூங்கா முன்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மூன்று பரல்களில் நிரப்பப்பட்ட தேங்காய் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதகர்கள் எம். தேவநேசன் மற்றும் என். விமலசேன ஆகியோர் இதனை தடுத்து, வாகனத்துடன் சந்தேகநபரையும் பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குறித்த எண்ணெய் மனிதர் பயன்பாட்டுக்கு பொருத்தமற்றது என உறுதி செய்யப்பட்டது. மேலும், அனுராதபுரம் பகுதியிலுள்ள பெரிய உல்லாச விடுதிகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரித்து, அதில் கொத்தமல்லி மற்றும் புதிய தேங்காய் எண்ணெயை கலக்கி, புதிய எண்ணெய் போல மாற்றி விற்பனை செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

அசாதாரண கடல் கொந்தளிப்பால் மட்டு ஏறாவூரில் கரையொதுங்கிய காரைதீவு மீனவப் படகுகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு