ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் வீதிகளில் சுற்றி திரியும் கட்டாக்காலி மாடுகளினால் தொடர்ந்து வீதி விபத்துக்கள், மற்றும் பொதுமக்களின் விவசாய நிலங்கள், சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வரும் நிலையில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவோம் என்று கூறிய ஏறாவூர் பற்று தவிசாளரால் அதனை இதுவரை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.
கட்டாக்காலி மாடுகளை பிடிப்பதற்கான முறையான திட்டம் இல்லாததால். ஒரு மாட்டை பிடித்து கட்டினால் ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் அதற்கும் யாரும் வராதநிலையில் தற்போது தவிசாளரே மாடுகளை பிடித்துக் கட்டுவதற்காக வீதி வீதியா செல்கின்றார்.
நேற்றைய (20) தினம் தவிசாளர் மாடுகளை பிடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்.















