Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; எம்.பி உதுமாலெப்பை

10 months ago
in செய்திகள்

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என 2026ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் 83 ஊழியர்களுக்கு கடந்த 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்களின் வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளது. 39வது நாளாக தொடர்ச்சியாக ஆரப்பாட்டம் செய்தும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பள நிலுவை தொடர்பாக பல முறைகள் மேலதிகாரிகளுக்கும், அலங்கை கனிப் பொருள் கூட்டுத்தாபனத் தலைவர், அமைச்சின் செயலாளருக்கும் பல தடவைகள் முறையிட்டும் இதுவரையும் தீர்வு கிடைக்காத நிலையில் தொடர் சத்தியாக்கிரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கௌரவ கைத்தொழில் அமைச்சர் திரு. சுனில் ஹந்துன்னெத்தி அவர்களிடம் ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் 83 பேர்களுக்கான சம்பள நிலுவையும் அவர்களுக்கான சம்பளமும் உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கௌரவ அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் இதுவரையும் 83 இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள நிலுவை இதுவரையும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. எனவே, புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் 83 ஊழியர்களின் சம்பள நிலுவையையும், சம்பளத்தையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இதேவேளை முன்னாள் கைத்தொழில், சுகாதார அமைச்சராக பதவி வகித்த திரு. ரமேஸ் பத்திரன அவர்கள் காலி மாவட்டத்தில் இருந்து 17 பேருக்கு தற்காலிக ஊழியர் நியமனங்கள் சென்ற 2023ம்ஆண்டு டிசம்பர் மாதத்தில் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த 17 பேருக்கான சம்பளம், மேலதிக கொடுப்புனவுகள், விடுதிகள், இலவச மின்சார வசதிகள் மற்றும் நீர் வசதிகள் உட்பட பல வசதிகளும் இன்றுவரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் 83 ஊழியர்களின் விடயத்தில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான செயற்பாடுகளின் கடிதங்களின் பிரதிகளை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
தொல்லியல் பலகையை அகற்றிய விவகாரம்; வாழைச்சேனை தவிசாளர் உட்பட மூவர் சரண்-சுமந்திரன் ஆஜர்

தொல்லியல் பலகையை அகற்றிய விவகாரம்; வாழைச்சேனை தவிசாளர் உட்பட மூவர் சரண்-சுமந்திரன் ஆஜர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.