Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்த கோட்டாபய; எம்.பி உதுமாலெப்பை

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து பழி தீர்த்த கோட்டாபய; எம்.பி உதுமாலெப்பை

10 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் பழி தீர்க்கும் நோக்குடன் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன் பின் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் முன்மொழிவு 09ம் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விபரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்தும் இதுவரையும் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை சமர்ப்பிக்காத நிலைமை தொடர்வது குறித்து முஸ்லிம் சமூகம் மிக கவலையடைகிறது என சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கௌரவ சுகாதார அமைச்சரிடம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் M.P அவர்கள் இப்பாராளுமன்றத்தில் கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கேட்டிருந்தார்.

அதன் பின் நான் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் (2025.09.11 ஆம் திகதி, முன்மொழிவு இலக்கம் 229) கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு முன்மொழிவினை வைத்தேன்.

இதுவரையும் எனது முன்மொழிவிற்கான பதில் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது என்பதனை மிக வேதனையுடன் கௌரவ அமைச்சர் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முன்மொழிவின் பிரதியினை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

புதிய அரசாங்க காலத்தில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களை எரிக்கவில்லை. கோத்தபாய ஜனாதிபதி எங்களது முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால்தான் எங்களின் ஜனாஸாக்களை எரித்தார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையாகும். நீதி மறுக்கப்பட்ட எமது சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கையினை ஏன் இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என்பதனை வேதனையுடன் கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்ட பெற்றோர்; வாகரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.