Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன; அமைச்சர் சந்திரசேகர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (26) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை எவ்வாறு மேம்படுத்தப்படும் என எமது விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்றொழில் விடயத்தில் நாம் இன்னமும் பழமையான நிலையிலேயே உள்ளோம் என்பதை ஏற்றாக வேண்டும்.

ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகின்றது. நவீன படகுகள் பற்றியும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மீன்பிடித்துறை வலுவிழந்து வரும் நிலையும் காணப்படுகின்றது.

இந்நிலைமையில் இருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. 2025 வரவு – செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்கு கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

அதேபோல மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த முறையைவிட இம்முறை எல்லா விடயங்களுக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்குரிய ஒதுக்கீடும் உள்ளது. மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலறிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையை சூழ கடல் வளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ரின் மீன் இறக்குமதி செய்யும்நிலை காணப்பட்டது. இதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது.

கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த காலங்களில் இவர்களுக்கு உப்பு பிரச்சினை இருந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, கடற்றொழில் அமைச்சால் இலங்கையில் பிரமாண்ட கண்காட்சி கடந்த வாரம் நடத்தப்பட்டது. எமது நாட்டின் மகத்துவம் இதன்மூலம் எடுத்துரைக்கப்பட்டது. சர்வதேசத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது.

மீனவர்களின் பிரச்சினைகள் எமக்கு தெரியும். அவற்றை தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளை நாம் மேற்கொள்வோம். மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று நாம் தீர்வுகளை வழங்கி வருகின்றோம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
வல்வெட்டித்துறையில் “மேதகு” பிறந்தநாள்;  கேக் வெட்டி கொண்டாட்டம்

வல்வெட்டித்துறையில் "மேதகு" பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.