Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

10 months ago
in செய்திகள்

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் 34 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியிருந்தனர். இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது.

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணித்திருந்தார்.

இந்நிலையில் கடற்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

நேரடியாக சென்று காப்பாற்ற முடியாத சூழ்நிலையில் ஹெலிகொப்டர்களை அதிகம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு