Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்தவற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிர தீபன் தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக யாழ்ப்பாண மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுப் புதன்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணி உரிய நேரத்தில் அறிக்கையிடல் வேண்டும்.இதன் மூலம் வினைத்திறனாக செயற்பட முடியும். அதற்காக அனைவரும் கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது மாவட்டத்தின் மொத்த குடும்ப எண்ணிக்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 7.9 வீதமானவர்கள் காணப்படுகின்றனர்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுத்தம் செய்வதற்கும், துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் உடனடியாக வழங்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதற்கு அமைவாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிதி பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும்.

சுற்றுநிருபத்திற்கு அமைய கொடுப்பனவுகளை விரைவுபடுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தாமாக விரும்பி மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்படும் பொருட்கள் தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்யப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.