டிட்வா புயலால் உருவாகியுள்ள அனர்த்த நிலையை முன்னிட்டு, இலங்கைப் போக்குவரத்து சபை (SLTB) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனிமேல் ரயில் ‘சீசன் டிக்கெட்டுகள்’ காட்டி SLTB சாதாரண பஸ்களில் பயணம் செய்யலாம் என்று அரச பேருந்தில் பயணிக்கலாம் என குறித்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிலும், இந்த சிறப்பு சலுகை அவசர காலத்திற்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதே நோக்கமாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், SLTB லக்சரி (ஏசி) மற்றும் சிறப்பு சேவைகளில் ரயில் சீசன் டிக்கெட்டுகள் செல்லாது என்பதை SLTB தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் காற்று வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








