மட்டக்களப்பு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.












இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அனுரேகா விவேகானந்தனும், விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் திருமதி வி.திருக்குமார், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மருத்துவ அதிகாரி ரி.மணிமாறன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யு.யுவநாதன் ஆகியோரும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பணிப்பாளர் எம்.சாமுவெலும் கலந்து கொண்டனர்.


















இதன்போது 23 சிறார்களுக்குப் பட்டமளிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

































