கொழும்பு மாநகர சபை பட்ஜெட் முன்மொழிவில் மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி தோல்வியடைந்துள்ளது.
நேற்று வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது தேசிய மக்கள் சக்தி 57 வாக்குகளை ஆதரவாகப் பெற்ற நிலையில், 60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டிருந்தன.








