Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோறளைப்பற்று பாதீடு”; துறைமுக மீனவர்களிடமிருந்து பணம் அறவிட முடிவு!

“சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோறளைப்பற்று பாதீடு”; துறைமுக மீனவர்களிடமிருந்து பணம் அறவிட முடிவு!

6 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச சபையின் பாதீடு என்பது வெறுமனவே மக்களுக்கு சேவையாற்றுவதற்கான பாதீடு இல்லை இது கற்பனையில் கூட எட்டி பார்க்க முடி யாத அளவுக்கு வருமானத்தை எதிர்பார்த்து வெறும் கண்துடைப்புக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதுடன் மக்களை ஏமாற்றும் செயல், மீண்டும் பொய்களைக் கூறி ஆட்சி செய்யும் அரசியல் கட்சி தனது இருப்பைதக்க வைப்பதாற்கான ஒரு வரவு செலவு திட்டமாகவே நான் இந்த பாதீட்டை பார்க்கின்றேன் என கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் எதிர்கட்சி பிரதேச சபை உறுப்பினர் தனபாலன் நிர்மலன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கறுவாக்கேணியில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச சபையின் பாதீடு சபையின் வருமானங்கள் செலவினங்கள் என்பவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கின்ற போது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சந்திகாந்தன் மிகவும் நேர்த்தியாக சபைக்குரிய வருமானங்களை ஈட்டகூடிய பல வேலை திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார் அதன் விளைவாக சபை இன்று வருமானத்தை ஈட்டிகொண்டுடிருக்கின்றது.

இந்த பாதீடு என்பது கற்பனைக்கெட்டாத விடயம். 11 கோடி ரூபாய்க்கு அதிகமான நிதியினை மக்களுடைய அபிவிருத்திக்கு ஒதுக்கி இருப்பதாக ஒரு பூச்சாண்டி தனமான அறிக்கைகளை இந்த சபை வெளியிட்டு உள்ளது. உண்மையிலேயே இந்த வருமானங்கள் எங்கிருந்து பெறப்படப் போகின்றது என்பது நாங்கள் சிந்திக்க வேண்டும்.

கல்குடா சுற்றுலா மையங்களில் இருக்கின்ற விடுதிகளிலிருந்து ஒரு வீதம் அறவிட வேண்டும் என்கின்ற சட்டம் இருந்தாலும் அதற்கான உப விதிகளை தயாரிக்க வேண்டும். அந்த உப விதிகள் தயாரிக்காமல் சட்ட விரோதமான ஒரு கலந்துரையாடல் நடந்து, அது தோல்வி அடைந்ததன் பின் எந்தவிதமான நடைமுறைகளும் செய்யாமல் பாசிக்குடா சுற்றுலா மையத்திலிருந்து எத்தனை ரூபாய் கிடைக்கும் என்று ஒரு போலியான அறிக்கையினை இந்த பாதீட்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அவ்வாறே வாழைச்சேனை துறைமுகத்தில் இயங்கு நிலையிலிருக்கின்ற மீன்பிடி படகுகள் மூலம் ஒரு தொகை பணத்தை நாங்கள் அறவிடுவோம் இதன் மூலம் இந்த சபைக்கு வருமானம் வரும் என்று அவர்கள் ஒரு கருத்தை கணித்து இருக்கின்றார்கள்.

பிரதேச சபையின் எந்தவித அனுமதி பத்திரங்களும் பெறப்படாத ஒருவரிடம் இருந்து வியாபார நோக்கத்துக்காக அவரிடம் பணம் அறவிடுவது என்பது சட்ட விரோதமான செயல். காரணம் அது மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடு , மீன்பிடி படகுகள் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஏற்கனவே பணம் செலுத்தி கொண்டுதான் அந்த மீன்பிடிதொழிலில் ஈடுபடுகின்றார்கள். அவர்களின் வாழ்க்கை என்பது சிரமம் இவ்வாறு இருக்கும் போது பிரதேசசபையும் பணத்தை அறவிடும் என்பது கற்பனை கதை மக்களை ஏமாற்றும் செயல்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்த பாதீட்டின் நகல் எங்களுக்கு கொடுத்து இருக்கின்ற போதிலும் இந்த பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் முகம் கொடுக்க முடியாத நிலையில் பயந்து கூட்டத்தை கலைத்து விட்டு பயந்து ஓடுகின்ற சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

பிரதேச சபையினுடைய இந்த பாதீட்டில் நீங்கள் எந்த விடயத்தை மக்கள் நலனுக்காக ஒதுக்கி இருக்கின்றீர்கள், எந்த வட்டாரத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கின்றீர்கள் என்ற தகவல் இந்த பாதீட்டில் குறிப்பிடப்படவில்லை . நாங்கள் ஒரு கட்சியின் ஊடாக மக்கள் பிரதிநிதியாக அந்த சபைக்குச் சென்று இருக்கின்ற எங்களுடைய வட்டாரத்தில் எங்களுடைய மக்களுக்கு இந்த பாதீட்டின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது கூட தெரியாமல் இன்றைய பாதீடு நிறை வேற்றப்பட்டிருக்கின்றது.

எந்த பிரதேச சபையாக இருந்தாலும் பிரதேச சபையினுடைய சட்டங்களுக்குட்பட்டு பெரும்பான்மை இருக்கின்ற அந்த கட்சி இந்த வருடம் பாதீட்டை நிறைவேற்றும். ஆனால் அதில் ஒரு உண்மை தன்மை இருக்க வேண்டும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் மீண்டும் பொய்களைக் கூறி தனது இருப்பை தக்க வைப்பதாற்கான ஒரு வரவு செலவு திட்டமாகவே நான் இந்த பாதீட்டை பார்க்கின்றேன் .

சட்டத்துக்கு முரணாக பாசிக்குடாவில் இருக்கின்ற சுற்றுலா மையங்களின் உரிமையாளர்களை அழைத்து மட்டக்களப்பில் இருந்து தங்களுடைய ஆலோசகர் என கூறிப்பிட்டு நடைபெற்ற கூட்டம் நடத்தப்பட்டது .வந்தபோது இந்த பிரதேச சபையி ல் ஆட்சி செய்கின்ற தமிழரசு கட்சியினுடைய உறுப்பினர் அனைவரும் ஒளிந்து கொண்டார்கள்.

மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை நடத்த வேண்டி இருந்தும் அந்த கூட்டத்தில் எவருமே சமூகம் கொடுக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது தடவையாக கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மாகாண உள்ளூராட்சி மன்றம் கூட்டத்தை ஒழுங்கு செய்தபோது ஆட்சி செய்யும் கட்சியை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு மன்னிப்பு கேட்டு கொண்டார்கள் இனிமேல் இவ்வாறு நடைபெறாது என ஏற்று கொண்டார்கள் .

இந்த பாதீட்டு கணக்கறிக்கையில் முதலாவதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் ஆணையாளர் நடத்திய கூட்டத்திற்கு சிற்றுண்டி செலவுக்காக செலவழிக்கப்பட்ட பணத்தை பிரதேச சபையினுடாக தவிசாளர் வழங்க முடியாது என்று அந்த கொடுப்பனவை இரத்து செய்து விட்டார். உண்மையில் வெட்கப்பட வேண்டிய ஒரு சிறுபிள்ளை தனமான செயல். அந்த சிற்றுண்டி செலவை திணைக்கள ஊழியர் தனது சொந்த பணத்தில் செலவு செய்ய வேண்டியது துர்ப்பாக்கிய நிலை.

பிரதேச சபை என்பது கிராம மட்ட தலைவர்களையும் பிரதேச சபை அரச உத்தியோகஸ்தர்களையும் இணைத்துக் கொண்டுதான் இந்த பிரதேச சபையினை வளர்க்க முடியுமே தவிர தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கினை வைத்துக்கொண்டு பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய முடியாது.

தமிழ் தேசியம் பேசிக்கொண்டவர்களினால் இந்த பிரதேச சபைக்கு ஒரு சதமேனும் வருமானம் பெறக்கக்கூடிய வழிமுறைகளை செய்து கொடுக்கவில்லை. அதிகாரிகளுடன் ஏட்டிக்கு போட்டியாக நிர்வாகம் செய்யப் போனால் எங்களுடைய மக்களைத்தான் பாதிக்கும் .

குடிநீர் பிரச்சினை, வீதி பிரச்சனை, வடிகான் பிரச்சனை இவற்றுக்காக ஒரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் எவ்வளவு பணம் ஒதுக்கி உள்ளீர்கள் என்று எந்தவிதமான அறிவிப்பும் இல்லாததால் இதை நாங்கள் எதிர்த்து இருக்கின்றோம்.

கடந்த ஆறு மாதங்களாக இருந்து இன்று வரைக்கும் எந்தவிதமான சேவைகளும் செய்யவில்லை. என்னுடைய சொந்த பணத்தில் நான் செய்த சேவையினை தவிர பிரதேச சபை பத்து ருபாய்க்கு கூட வேலை செய்யவில்லை. சுற்றுலா மாதிரி ஓடி திரிந்தும் இதுவரைக்கும் ஒருசேவையும் செய்யவில்லை.

பிரதேச சபை சட்டம் என்பது தவிசாளர் பிரதேசசவை செயலாளர்கள் தன்னிச்சையாக அந்த முடிவுகளை எடுத்து விட்டு சென்றுவிட முடியாது. ஒரு வருமானத்தை ஈட்ட வேண்டுமா இருந்தால் புதிதாக ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டுமாக இருந்தால் அதற்கான உப விதிகளை தயாரித்து சபையில் சமர்ப்பித்து அதற்குரிய அங்கீகாரத்தினை பெற்று அதனை மாகாண சபை அனுப்பு மாகாண சபை மூலமாக உள்ளூராட்சி அமைச்சின் அனுமதியினை பொற்ற பின்பு தான் நாங்கள் புதிய வருமானங்களை ஈட்ட முடியும்.

எனவே முதலில் அதற்கான சட்டத்தின் நிறைவேற்ற வேண்டும். சட்டத்தினை நிறைவேற்றாமல் தொழில் செய்பவர்களிடம் நான் அவனிடம் வரி வசூலிக்க வேண்டும் என அதிகாரத்தோடு நாங்கள் வரி வசூலிப்போமாக இருந்தால் நாங்கள் எல்லோரும் சட்டத்தின் முன் கைகட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழச்சி கட்சியின் ஆட்சி என்பது சாதாரண வருமானத்தை ஈட்டி வருமானத்தின் மூலம் மக்களுக்கு சேவையற்றுகின்ற பிரதேச சபை ஒரு வியாபார நிலையம் அல்ல நிலம் சார்ந்த, உரிமை சார்ந்த பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றது.

பிரதேச சபை எல்லைக்குள்ளே தமிழர் கிராம சேவகர் பிரிவுக்குள் அமைந்துள்ள பொது மைதானத்திற்கு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் பெயரை வைக்க முடியாமல் இருக்கின்றது. அவ்வாறு வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன் இருக்கின்ற பிரதேச சபையினுடைய தாய் வளவு அதனை இன்று வரை மீட்க முடியாமல் இருக்கின்றது. அதனை ஒரு பள்ளிவாசல் தனக்குரிய காணி எனகூறி அங்கு வியாபார நிலையங்களை அமைத்து வாடகைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது அதற்குரிய ஆவணங்கள் எங்கே.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை குறை கூறிக்கொண்டு வந்தீர்கள் இன்று உங்களிடம் பெரும்பான்மை இருக்கின்றது. பத்து வட்டாரங்களில் 10 தமிழ் உறுப்பினர்கள் வென்று அதனுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கின்றீர்கள். தமிழ் மக்களினுடைய உரிமை சார்ந்த நிலம் சார்ந்த விடயங்களை கூட கடந்த ஆறு மாத காலமாக உங்களால் முன்னெடுக்க முடியாவிட்டால் எங்கே நீங்கள் இந்த பிரதேசத்தின் சரியான அரசியல் செய்ய முடியும் நீங்கம் நன்றாக சிந்திக்க வேண்டும்.

ஆகவே நான் இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு குறிப்பாக ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன் எங்களுடைய வளம் எங்களுடைய பிரதேசம் என்றும் மிகவும் அவதாரமாக இருக்க வேண்டும் மற்றையே பிரதேச சபைகள். போன்று எங்கள் பிரதேச சபை அல்ல ஒன்றுக்கு பின்னால் ஒன்றை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் விழித்துக் கொள்ளாமல் இருந்தால் இந்த பிரதேச சபையால் எதையும் நாங்கள் சாதிக்க முடியாது என்பதனை நான் உங்களுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கின்றேன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.