Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தி கைதான என்.பி.பி உறுப்பினருக்கு பிணை

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தி கைதான என்.பி.பி உறுப்பினருக்கு பிணை

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹணவை புத்தளம் நீதிவான் நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்துள்ளது.

புத்தளம் பதில் நீதிவான் தயானி சந்தியா ரத்நாயக்க சந்தேகநபரான விமல் ரோஹணவுக்கு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு அனுமதி அளித்தார்.

புத்தளம் பிரதேச சபையின் மங்களஎளிய வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் விமல் ரோஹண கடந்த 5ஆம் திகதி அனர்த்த நிவாரணக் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் கிராம உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை தனது லொறியால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்து இடம்பெற் சந்தரப்பத்தில் பிரதேசசபை உறுப்பினர் குறித்த கிராம உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற அனர்த்தக் குழுக் கூட்டத்தின் பின்னரும், விமல் ரோஹண தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு மீண்டும் அச்சுறுத்தல் விடுத்ததாக கிராம உத்தியோகத்தர் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் முந்தலம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று நேற்று காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தொடர்பான வழக்கு புத்தளம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் தயானி சந்தியா ரத்நாயக்க தலைமையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த நீதிவான் சந்தேகநபரை கடும் நிபந்தனைகளுடன் கூடிய பினையில் விடுவித்திருந்தார்.

அதற்கமைய சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதிவான் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை முந்தலம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிடுமாறு தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியை ரணிலே குறைத்தார்; ராஜித சேனாரத்ன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.