Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைப்பு

சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைப்பு

9 months ago
in செய்திகள்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்பிற்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குங்கள்.

ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கு சுமார் 40 இலட்சம் ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்தினரே இதனை வாங்குகிறார்கள். அத்துடன் இது சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனம்.

உண்மையில் இவ்வாறான வாகனங்களையே ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அனர்த்த நிலைமையால் மக்களின் பொருளாதார மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.

முன்பதிவு செய்தவர்களால் வாகனங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்கள் கடந்தவுடன் 3% அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே, நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, முடிந்தால் இந்த 3% அபராதத்தை நீக்கித் தருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிணை வாங்கிக்கொடுக்க திரைமறைவில் முயற்சிக்கும் தமிழரசு கட்சி?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு