Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் விளக்கம்

மட்டக்களப்பு நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படாமை குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மாநகர முதல்வர் விளக்கம்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாட்டின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநகரசபை பொதுமக்களிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தத்தில் பலர் உயிரிழந்ததையும், ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதையும் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் நோக்குடனும், இம்முறை கேளிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களை தவிர்க்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பிற்காக, நத்தார் பண்டிகை காலத்தில் வீணான களியாட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, அந்த வளங்களை பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்திருந்த கோரிக்கையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, இம்முறை மட்டக்களப்பு மாநகரசபையால் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை என்றும், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை உணர்ந்து அவர்களுடன் ஒற்றுமை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
மட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வ நினைவேந்தல்

மட்டு மாவட்ட செயலக வளாகத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வ நினைவேந்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு