ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான பசு மாடொன்றினை களவாடிய சந்தேகத்தின் பேரில் கிரான் மற்றும் புலிபாய்ந்தகல் பிரதேசங்களைச்சேர்ந்த 26,34,38 வயதுடைய மூன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த மாட்டினை சுடுவதற்கு பயன்படுத்திய கட்டுத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டின் உரிமையாளரினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எச்.பி.சஜீவ சம்பத் குமாரவின் உத்தரவுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 39210-வீரசிங்க, 8656-தினேஷ், 92658-அக்ரம், 40258-றிஷோ, விஷேட பிரிவைச்சேர்ந்த பயாஸ், விஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.








