Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

வாகரையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் அம்பந்தனாவெளி – சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப் படையினர் இன்று 06.01.2026 மீட்டுள்ளனர்.

இதன் போது 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப்புலிகளால் இவ்வெடிபொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என படையினர் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக மடு தோண்டும் போது மர்மப் பொருள்கள் தென்படுவதனை அவதானித்து வாகரை விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனை அடுத்து அதிரடிப் படையினர் அந்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வெடிபொருட்கள் உள்ளதை உறுதிப்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதியை பெற்றதையடுத்து மீட்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டது..

திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏஎம்ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார, அம்பந்தனாவெளி கிராமசேவகர் சீ.கஜேந்திரன், வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமிலசிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் மீட்பு நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்ட ன.

கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் இட்டு நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டி ருந்ததுடன் அடைமழையின் போதும் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
வெனிசுலா அதிர்ச்சி: அமெரிக்காவின் ஏகாதிபத்திய மீளுருவாக்கம்

வெனிசுலா அதிர்ச்சி: அமெரிக்காவின் ஏகாதிபத்திய மீளுருவாக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு