பண்டிகைக் காலத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேடபரிசோனைகளை இன்று (13) முன்னெடுத்திருந்தனர்.
களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதர்கள், உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பொருட்கள் மற்றும் பண்டங்களின் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொருட்களின் தரம், போன்ற பல விடயங்கள் தொடர்பில் மிகவும் கவனமாக ஆராய்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.











