Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

உயர் ரக மதுபான போத்தலுக்கு ஆசைப்பட்ட வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது

10 months ago
in செய்திகள்

30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் உயர் ரக மதுபான போத்தல் ஒன்றினை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, ஹூலங்னுகே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (12) பிற்பகல் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளர் மற்றும் அவரது மனைவியின் பெயரில் தனித்தனியாக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வந்துள்ளார். எனினும், குறித்த காணியின் ஒரு பகுதி பாதுகாப்பு வனப்பகுதிக்குச் சொந்தமானதாகும்.

குறித்த பகுதியில் முறைப்பாட்டாளர் சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 30 ஆயிரம் ரூபா பணத்தையும், உயர் ரக மதுபான போத்தல் ஒன்றையும் வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர் கோரி பெற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, ஹூலங்னுகே வனஜீவராசிகள் அலுவலகத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
உலக செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

November 5, 2026
பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்
செய்திகள்

பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்

November 5, 2026
ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!
செய்திகள்

ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!

November 5, 2026
1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
Next Post
23,344 ஆசிரியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்

23,344 ஆசிரியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு