கல்லடி நாவலடி கடற்கரையில் நேற்றைய (15) தினம் கடலில் மிதந்து வந்த மர்மப்பொருளினால் அங்கு ஒரு பரபரப்பான சூழல் உருவாகியிருந்தது.
பின்னர் அது பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு மீட்கப்பட்டதுடன், இது ஒரு மிதவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேசமயம் இதேபோன்ற மிதவைகள் அடிக்கடி பல பகுதிகளில் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








