Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசை; பண்டிகை காலத்தில் மக்களுக்கு அசௌகரியம்

ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசை; பண்டிகை காலத்தில் மக்களுக்கு அசௌகரியம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர், கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காத்திருந்ததால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஹட்டன் பேருந்து நிலையத்தில் காலை 7 மணி முதல் காத்திருக்கும் பயணிகள், பேருந்துகள் போதியளவு சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவித்தனர்.

வழக்கமாக பண்டிகை காலங்களில் ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அதிக பயணிகள் வருகை தருவார்கள் என தெரிந்தும் போதுமான பேருந்துகள் இல்லை என குற்றம் சுமத்துகின்றனர்.

பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் உள்ளிட்ட இடங்களுக்குத் திரும்புவதற்காக விசேட பேருந்து சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ஆனால் போதியளவில் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியதோடு ஹட்டன் மத்திய பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் நீண்ட நேரம் தூர சேவை பேருந்துகள் இன்மையால் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இவ்வாறு அதிக பயணிகள் பயணம் மேற்கொள்ளும் காலங்களில் தேவைக்கேற்ப மேலதிக பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

போதிய பேருந்து இல்லாத காரணத்தால் நீண்ட நேரத்திற்கு பேருந்து தரிப்பிடத்திலிருந்து செல்லும் பேருந்தில் பெரும்பாலான இருக்கைகள் உடனடியாக நிரம்பிவிடுவதால் பேருந்து நடுவில் நடைபாதை மற்றும் படிக்கட்டு அருகில் ஏராளமானவர்கள் அமர்ந்தும், நின்றும் பயணம் செய்து வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
பொது சுகாதார பாதுகாப்புக்காக சாய்ந்தமருது பகுதி கிணறுகளில் குளோரினேற்றம்

பொது சுகாதார பாதுகாப்புக்காக சாய்ந்தமருது பகுதி கிணறுகளில் குளோரினேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு