Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய ஹஜ் குழுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 103 பிரதிவாதிகள் மீது வழக்கு!

புதிய ஹஜ் குழுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் 103 பிரதிவாதிகள் மீது வழக்கு!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை மீறி, புதிய ஹஜ் குழு தன்னிச்சையாக செயற்படுவதாகக் கூறி அகில இலங்கை ஹஜ் சுற்றுலா முகவர்கள் சங்கம் (ACHTOA) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட திரு. ரியாஸ் மிஹுலார் தலைமையிலான ஹஜ் குழு, முகவர் மதிப்பீடு மற்றும் ஒதுக்கீட்டு முறைகளில் சட்டவிரோதமான மாற்றங்களைச் செய்துள்ளதாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஆண்டுக்கான ஹஜ் யாத்திரீகர்கள் தலா 750,000 ரூபாவை முன்கூட்டியே வைப்பிலிட வேண்டும் என்ற கட்டாய நடைமுறை மற்றும் அமானா வங்கியுடன் தொடர்புடைய 26.6 மில்லியன் ரூபா நிதிச் சுமையை முகவர்கள் மீது சுமத்தியமை ஆகியன இதில் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், விசா முறைகேடுகள், முன்னதாக தடைசெய்யப்பட்ட முகவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கியமை மற்றும் சவுதி அரேபியாவின் நிலையான ஒதுக்கீட்டு முறைக்கு முரணான நடைமுறைகளை அமுல்படுத்தியமை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், ஹஜ் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பான அமைச்சர்கள் உட்பட 103 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் வரும் ஜனவரி 21, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டு சந்திவெளி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு