Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் ஜனாதிபதி நடந்தது தொடர்பில் சாணக்கியன் கருத்து

யாழில் ஜனாதிபதி நடந்தது தொடர்பில் சாணக்கியன் கருத்து

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காட்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியைதரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் ‘நந்தவனத்தில் ஓர் நாள்’என்னும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் கொண்டாட்டம் நேற்று (18) நடைபெற்றது.

நந்தவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கழக தலைவர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ், சிவஸ்ரீ.ர்பத்மநிலோஜ சர்மா குருக்கள் , களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேள், கழகத்தின் முக்கியஸ்தர்கள்,முதியோர் இல்ல நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பொங்கல் படைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்கள், முதியவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் சிறுவர்கள் முதியவர்களை பாடல்பாடி முதியவர்களுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்தமை விசேட அம்சமாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், களுவாஞ்சிகுடி பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தபிறகு என்னால் முடிந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.


கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த சில அரச அதிகாரிகளும் எமது வேலைத்திட்டத்திற்கு தடையாக இருந்தார்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்ட நிலைமைகள் கடந்தகாலத்திலிருந்தது.

நாங்கள் இந்த மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இந்த அரசாங்கத்தினைப்பொறுத்த வரையில் இந்த ஜனாதிபதி சின்ன காற்சட்டையினை போட்டுக்கொண்டு நடைப்பயிற்சிக்கு செல்கின்றார் என்பதும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செய்தியாக மாறிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் சில விடயங்கள் போகப்போகத்தான் எங்களுக்கு தெளிவாக தெரியவரும்.

இதேபோன்று இந்த களுவாஞ்சிகுடி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விமர்சிப்பவர்களிடம் ஒருவேண்டுகோளை முன்வைக்கின்றேன். நீங்கள் என்னை விமர்சிப்பதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. முடிந்தளவு அனைவரும் இணைந்து பயணிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Tags: Battinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
தேர்தலின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர!

தேர்தலின் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஜனாதிபதி அநுர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.