Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

கிழக்கு மாகாண வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பை நிறுத்தாவிடின் நாளை போராட்டம் வெடிக்கும்; ஈ.பி.டி.பி எச்சரிக்கை

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் 4 நாட்களாக பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டும், அத்தோடு இந்த போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இல்லாவிடில் காந்தி பூங்காவில் மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டமாக வைத்திய பணிப்பாளர் காரியாலயத்தை முற்றுகையிடுவோம் என ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவானந்தராஜா, அம்பாறை மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் கூட்டாக இணைந்து இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை இடமாற்ற கோரி கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அரச வைத்திய சங்கம் கடந்த 4 தினங்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியத்துறையில் சீர்கேடு இருந்தால் வைத்திய நிர்வாகத்துக்கு உள்ளேயே கூடி ஆராய்ந்து அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் மக்களால் வைத்திய துறை அதிகாரிகளுக்கும் எந்த ஆபத்துக்களும் எந்த அசௌகரியங்கள் ஏற்படவில்லை எனவே வைத்திய அதிகாரிகளுக்குள் ஏற்படுகின்ற இவ்வாறான பிரச்சனைகளுக்கு நீங்கள் ஒன்று கூடி அதற்கான முடிவை எடுக்க வேண்டும் மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக் கூடாது .

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்றால் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மட்டும் போராடுவதே சிறந்தது வைத்தியர்களுக்கு போராடுவதற்கு உரிமை உண்டு எந்த வைத்தியசாலையில் பிரச்சனையே அந்த அந்த பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் போராட வேண்டும். இதைவிடுத்து கிழக்கு மாகாணம் தழுவிய போராட்டம் செய்ய கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பில் டித்வா புயலால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது

உங்களுக்கு தெரியும் தொற்று நோய்கள் அதிகரித்தால் வைத்தியர்கள் அவர்களை பரிசோதித்தால் தான் அவருக்கு டெங்கு தொற்று நோயா அல்லது எலிகாச்சல் என கண்டறிய முடியும் என்பதுடன் எல்லா மக்களும் தனியார் வைத்தியசாலைக்கு சென்ற மருந்து எடுப்பதற்கு வசதி வாய்ப்புகள் இல்லை.

இன்று மாவட்டத்தில் எத்தனையே பேர் பஸ்க்கு பணம் இல்லாமல் கடன் பட்டு மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்றால் இலவசமாக நோய்க்கான மருந்தை எடுக்க முடியும் என தூர பிரதேசங்களில் இருந்து வந்து தொடர்ச்சியாக நான்கு நாட்களாக மருந்து எடுக்க முடியாமல் திரும்பி சென்று கொண்டிருக்கின்றனர்.

அதோடு நீங்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக வைத்தியதுறையில் கல்வி கற்று அதே வரிப்பணத்தில் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இந்த சம்பளங்களையும் பெற்றுவிட்டு மக்களை இக்கட்டான நிலைக்கு தள்ள கூடாது என்பதுடன் மக்களின் உயிரோடு நீங்கள் விளையாடக்கூடாது.

எனவே இதனை கவனத்தில் எடுத்து இந்த போராட்டத்தை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவந்து வரவேண்டும் இல்லாவிட்டால் இந்த போராட்டத்துக்கு எதிராக நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டு காந்தி பூங்காவில் மக்கள் அணி திரண்டு பாரிய ஆர்பாட்டமாக வைத்திய அதிகாரி பணிமனை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் புதிய உதவி பிரதேச செயலாளர் பதவியேற்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.