Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

“அமெரிக்கா இல்லையெனில் கனடா உயிர் வாழாது”; டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனம்

10 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, டாவோஸ் நகரத்தில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின் (WEF) 56வது ஆண்டு உச்சிமாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டை அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக இணைக்க வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிற நாடுகளை அச்சுறுத்தப் பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவைக் கனடா பிரதமர் மார்க் கார்னி சாடியிருந்தார்.

உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளில் சுயசார்பு இல்லாத நாடுகள், மற்றவர்களின் தயவில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை உலக அமைதி மற்றும் சமநிலையை சீர்குலைக்கும் என்றும் எச்சரித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ஏராளமான இலவச சலுகைகளைப் பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

கிரீன்லாந்து மீதான வரி திட்டங்களை எதிர்த்து கனடா எடுத்த நிலைப்பாட்டையும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “Golden Dome” ஏவுகணை பாதுகாப்பு திட்டம் கனடாவையும் பாதுகாக்கும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் மார்க் கார்னியை தனது புதிய “Board of Peace” என்கிற உலகத் தலைவர்கள் குழுவில் சேர அழைத்திருந்தார்.ஆனால் திடீரென, அவர் அந்த அழைப்பை ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 4, 2026
கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!

November 4, 2026
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

November 4, 2026
மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!
செய்திகள்

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

November 4, 2026
TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

November 4, 2026
Next Post
GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

GMOA தொழிற்சங்க நடவடிக்கை; மட்டு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் மக்களுக்காக பணியில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு