எந்தவொரு அத்துமீறலுக்கும் ஐரோப்பா ஒருபோதும் அடிபணியாது என்றும், அத்தகைய சூழல் உருவானால் அதற்கான பதிலடி மிகவும் உறுதியானதாக இருக்கும் என்றும் ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிரான எந்த சவாலையும் எதிர்கொள்ள ஜெர்மனி முழுமையாக தயாராக இருப்பதாக கூறினார்.
“எதற்கும் ஜெர்மனி தயார். எந்த சவாலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயங்கமாட்டோம். ஐரோப்பாவின் ஒற்றுமையும் பாதுகாப்பும் எங்களின் முதன்மை” என ஜெர்மனி அதிபர் வலியுறுத்தினார்.
மேலும், உலக அரசியல் சூழலில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.








