Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டனில் நகையை பார்ப்பதாக கூறி அதனை எடுத்துக்கொண்டு ஓடியவர் கைது

ஹட்டனில் நகையை பார்ப்பதாக கூறி அதனை எடுத்துக்கொண்டு ஓடியவர் கைது

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன் நகரிலுள்ள ஒரு நகைக் கடையிலிருந்து 2,89,000 ரூபா மதிப்புள்ள தங்க நெக்லஸை திருடிச் சென்ற சந்தேக நபர், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஹட்டன் நீதிவான் எஸ். ராம்மூர்த்தி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட கிவ் தோட்டத்தின் மேற்பகுதியில் வசிக்கும், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தில், தங்க நெக்லஸை வாங்குவதாகக் கூறிய சந்தேக நபர், தனது மனைவி, வங்கிக்குச் சென்றுள்ளதாக நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் திரும்பி வரும் வரை நெக்லஸிற்கான பில்லைக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில், நெக்லஸை ஆய்வு செய்வதாக கூறி திடீரென அதனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹட்டன் தலைமையக பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. 

அதன்பேரில், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், தலைமையக தலைமை பொலிஸ் அதிகாரி தலைமையில் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.

மேலும், சந்தேக நபர் தங்க நெக்லஸுடன் ஹட்டன் முதல் வட்டவளை வரை ரயில் பாதையோரமாக நடந்து சென்று, பின்னர் நாவலப்பிட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் அந்த நகையை  1,69,000 ரூபாய்க்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை கொழும்பில் கல்வி பயிலும் தனது மகனுக்கும், மீதமுள்ள தொகையில் ஒரு பகுதியை கடனாளர்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்படும்போது சந்தேகநபரிடமிருந்து  10,000 ரூபா மட்டுமே மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மாநகரத்தை பிழையான திசையில் வழி நடத்த அனுமதிக்க முடியாது; மாநகர சபை அமர்வில் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தல்

மாநகரத்தை பிழையான திசையில் வழி நடத்த அனுமதிக்க முடியாது; மாநகர சபை அமர்வில் உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு