Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்மேட்டில் மோதி 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி

மண்மேட்டில் மோதி 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கினிகத்தேன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து; 80 பயணிகளின் உயிர்தப்பினர்

தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று திடீரென செயலிழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேன கடவல மஹா வங்குவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பஸ் ஒரு வளைவை எடுக்க முயன்றபோது அதைக் கட்டுப்படுத்த இரண்டாவது கியருக்கு மாற்றியதாக, மூன்று குழந்தைகளின் தந்தையான பஸ் சாரதி மகேஷ் சுதர்சன் (வயது 49) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பஸ்ஸின் பிரேக் அமைப்பு திடீரென செயலிழந்ததாகவும், இதன் காரணமாக பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடும் மழை பெய்துகொண்டிருந்த போது சாய்வான பகுதியில் பஸ்ஸை மண் மேட்டில் மோதி சாரதி நிறுத்தியுள்ளார், இதனாலே பெரும் விபத்து ஒன்றைத் தவிர்க்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நேரத்தில் பஸ்ஸில் சுமார் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில், பஸ் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வேறு பஸ்ஸில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
‘டிட்வா’வால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 6,680 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில்

‘டிட்வா’வால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 6,680 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு