Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

9 months ago
in செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை முன்வைக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர கால அவகாசம் வழங்கியிருந்தது.

இருப்பினும், சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர செயற்குழு கூட்டம் இன்று (31) காலை நடைபெற்றது.

பெப்ரவரி 02 காலை 8.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:

வைத்தியசாலையில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்கு பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகளை வழங்குவது நிறுத்தப்படும்.

வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பது நிறுத்தப்படும்.

அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் வைத்தியர்கள் தன்னார்வமாக கலந்துகொள்வதிலிருந்து விலகுவர்.

போதிய வைத்தியர்கள் இல்லாத நிலையில், வைத்தியசாலைகளில் புதிதாக திறக்கப்படும் வார்டுகள் அல்லது பிரிவுகளுக்கு வைத்தியர்களை இணைப்பது நிறுத்தப்படும்.

நோயாளிகளின் பாதுகாப்பு, தனிப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் போதுமான ஊழியர் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளிகளைப் பரிசோதிப்பதிலிருந்து வைத்தியர்கள் விலகுவர்.

விசேட வைத்திய நிபுணர்கள் தாம் நியமிக்கப்பட்ட வைத்தியசாலையில் மட்டுமே சேவையாற்றுவர். விசேட நிபுணர்கள் இல்லாத பிற வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளை ஆற்றுவதிலிருந்து அவர்கள் விலகிக்கொள்வர்.

இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!
செய்திகள்

அதிநவீன வாகனங்களில் பயணிக்கும் ஆசை துறந்த தேரர்கள்!

October 27, 2026
பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 27, 2026
தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
செய்திகள்

தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!

October 27, 2026
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!

October 27, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!

October 27, 2026
Next Post
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200; க்கும் மேற்பட்டோர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு