Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் குறைந்த வயது கர்ப்பம் அதிகரிப்பு

நாட்டில் குறைந்த வயது கர்ப்பம் அதிகரிப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி 2025 ஆம் ஆண்டில் 79 பேர், 2024 இல் 53 பேர் கர்ப்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் 9 பதிவாகியுள்ளதுடன் இது 2024 உடன் ஒப்பிடும்போது சிறுவர் திருமணங்களில் குறைவு எனவும் 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட திருமணங்கள் 14 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நிர்வாண புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியிடுவதாக கூறி சிறுவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 150 வழக்குகள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளது.

சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், ஒக்டோபர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் ​தெரியவருகிறது.

இதில் 8,514 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகவும் மீதமுள்ள 1,941 வழக்குகள் ஏனையவை எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 32 சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் கடந்த ஆண்டில் பதிவாகியுள்ளன.

சட்டவிரோத போதைப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்திய 116 சிறுவர்கள் குறித்தும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட்டு பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற சம்பவங்கள் 9 பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 627 சிறுவர்களுக்கு உளவியல் சமூக ஆதரவு அல்லது ஆலோசனை தேவைப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பான 93 முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் 545 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 231 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!
உலக செய்திகள்

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களுக்கு கடவுச்சீட்டு, விசா விதிகளில் தளர்வு!

November 6, 2026
பரீட்சைச் சான்றிதழ்களுக்கான இணையவழி விண்ணப்பச் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

பரீட்சைச் சான்றிதழ்களுக்கான இணையவழி விண்ணப்பச் சேவை இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 6, 2026
தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!
செய்திகள்

தமிழ்நாட்டிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த 2,000 தமிழ் நூல்கள்; பொது நூலகத்திற்கு வழங்கி வைப்பு!

November 6, 2026
மயிலத்தமடு விவகாரத்தில் சஜித் பிரேமதாச மௌனம் ஏன்?; மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றும் கவனம் செலுத்தவில்லை; அரியநேத்திரன் கேள்வி!
செய்திகள்

மயிலத்தமடு விவகாரத்தில் சஜித் பிரேமதாச மௌனம் ஏன்?; மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றும் கவனம் செலுத்தவில்லை; அரியநேத்திரன் கேள்வி!

November 6, 2026
இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை
செய்திகள்

இரண்டு ஆண்டுகளாகியும் தீராத பிரச்சினை; பிரௌண்ட் வீதி ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகள் அமைக்க அர்ச்சுனா கோரிக்கை

November 6, 2026
Next Post
நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

நாட்டை கலாசார சீரழிவிலிருந்து காப்பாற்ற தேரர்கள் ஒன்றிணையவேண்டும்; உபாலி தேரர் வலியுறுத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு