Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவுடன் போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகள் எதிர்கொள்ளும்; ஐ.சி.சி எச்சரிக்கை

இந்தியாவுடன் போட்டியை புறக்கணித்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகள் எதிர்கொள்ளும்; ஐ.சி.சி எச்சரிக்கை

6 months ago
in செய்திகள், விளையாட்டு

2026 டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. கருதுகின்றது.

மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது நிலைப்பாடு தொடர்பில் பாகிஸ்தான் ஐ.சி.சி. க்கு இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.

எனினும், முன்னெச்சரிக்கையாக ஐ.சி.சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.

ஐ.சி.சி போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை.

2026 ஆண்கள் டி20 உலகக்கிண்ணத்தை வெற்றிகரமாக நடத்துவது ஐ.சி.சியின் முதன்மை இலக்காகும்.

அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் உண்டு.

அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பி.ஐ.சி பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.

போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு