Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார்; விருப்பத்தை தெரிவித்தார் டக்ளஸ்

தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார்; விருப்பத்தை தெரிவித்தார் டக்ளஸ்

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இணைந்து பயணிக்கத் தமிழ்க் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தால், அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், 1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தேன். கடந்த பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளேன். அதை நான் ஒரு சறுக்கலாகவே கருதுகின்றேன்; தோல்வியாக அல்ல. வருங்காலத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

தனது அண்மைய கைது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், என் கைது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், நீதி வெல்லும்; உண்மை விரைவில் வெளிவரும் என நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சக தமிழ்க் கட்சிகளுக்கும் எனக்கும் இடையில் நேச முரண்பாடே உள்ளது, பகைமை இல்லை. எனினும், சில தமிழ்க் கட்சிகள் என் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலுடன், பயத்தின் அடிப்படையில் செயற்படுகின்றன.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து உறுதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், எனினும், அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது நல்லது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எனது கட்சியை மேலும் செழுமைப்படுத்தி, வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே எனது பிரதான நோக்கம் என்றும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
Next Post
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு