கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (05) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், இதன்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.







