Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் வாக்குறுதிகள் பல இருந்தும் நாட்டின் அடித்தளம் பலவீனமாகவே உள்ளது; கர்தினால் ரஞ்சித்

அரசியல் வாக்குறுதிகள் பல இருந்தும் நாட்டின் அடித்தளம் பலவீனமாகவே உள்ளது; கர்தினால் ரஞ்சித்

7 months ago
in செய்திகள்

அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடைபெற்றன. இதன்போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நீண்ட காலத்தில் ஆன்மீக, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், சுதந்திரம் குறித்த ஆரம்பகால கனவை இன்னும் நனவாக்க முடியாமல் இருப்பது கவலைக்குரியது.

சுதந்திரத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை நமது உள்நாட்டு உற்பத்தி முறையை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டன.

அன்று அநேகமானவற்றில் தன்னிறைவு பெற்றிருந்த நாம், இன்று ஒரு சிறிய ஊசி முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அன்று 20 ரூபா வரையில் இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று பலமடங்கு உயர்ந்து நமது பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நமது சமூகத்தில் முன்பு இருந்த ஒழுக்கம், நேர்மை மற்றும் தேசபக்தி இன்று எங்கே மறைந்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது. மதங்கள் மனிதர்களை மிருகங்களாக மாற்றாமல், பண்புள்ளவர்களாக மாற்றும் ஒரு வழியாகும்.

மதத் தலைவர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் பொதுப் பிரச்சினைகளில் கருத்துத் தெரிவிக்க உரிமை இல்லாதவர்கள் போலச் சிலர் கருதும் நிலை தற்போது வலுத்து வருகிறது. சில அமைச்சர்கள் கூட மதத் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை நாம் கண்டிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார முன்னேற்றம் என்பது அந்த நாடு தார்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

மதமோ, சரியான கொள்கைகளோ இல்லாத சமூகம் நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு இன்றைய ஐரோப்பாவே சான்று. அத்தகைய சூழலை இலங்கையில் உருவாக்க முயல்வது முட்டாள்தனமான செயலாகும்.

இலங்கை தற்போது மிகவும் ஆபத்தான ஒரு பொருளாதாரக் காலகட்டத்தில் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பின்பற்றினாலும், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் கடன் சுமையால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரசியல் தலைவர்கள் எத்தனை வாக்குறுதிகளை வழங்கினாலும் நாட்டின் அடித்தளம் இன்னும் பலவீனமாகவே உள்ளது.

நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்திற்குப் பொருந்தாத சிந்தனைகளைத் திணிக்க முயலாமல், நமது நாட்டில் நிலவும் மத மற்றும் தார்மீக விழுமியங்களின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
Next Post
கொழும்பில் சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொலை!

கொழும்பில் சுதந்திர தினத்தில் இடம்பெற்ற கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.