சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளுடன் இளைஞன் ஒருவன் காட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு – கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இளைஞன் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து இன்று அதிகாலை 12.35 மணியளவில் காட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான இளைஞன் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 386 அலங்கார பூச்செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அலங்கார பூச்செடிகளின் பெறுமதி 6 இலட்சம் ரூபாய் என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.








