Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

வீதி விபத்துகளில் இரு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

7 months ago
in செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு இளைஞர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

காரைநகர் – மாதகல் வீதியில் பொன்னாலை கோவில் அருகே இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொன்னாலைய சந்தி நோக்கி அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ​செலுத்துனரும் பின்னால் அமர்ந்து சென்றவரும் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் காரைநகர், விக்காவிலைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார். வட்டுக்கோட்டை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், புத்தளம் – திருகோணமலை வீதியின் 17ஆம் சந்தி பகுதியில், அனுராதபுரம் நோக்கிச் சென்ற கெப் வாகனமொன்று, எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த கை உழவு இயந்திரத்துடன் நேருக்கு நேர் மோதியதில் மற்றுமொரு விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த கை உழவு இயந்திரத்தின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அளுத்கம, இஹல புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் ஆவார். விபத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய கெப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சாலியவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், தம்புள்ளை – ஹபரணை வீதியின் திகம்பதன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய மற்றுமொரு இளைஞர் உயிரிழந்தார்.

ஹபரணை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், பின்னால் அமர்ந்து வந்தவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு
செய்திகள்

இலங்கையின் கடலில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய், எரிவாயு வளங்கள்; சர்வதேச நிறுவனங்களுக்கு கதவு திறப்பு

August 24, 2026
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
செய்திகள்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொது பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

August 24, 2026
ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கான தீர்ப்பு செப்டம்பர் 22ஆம் திகதி என அறிவிப்பு

August 24, 2026
நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு
செய்திகள்

நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு

August 24, 2026
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

August 24, 2026
கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!
செய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!

August 24, 2026
Next Post
ஜனாதிபதியின் விசேட கவனத்தின் கீழ் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு துரித அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

ஜனாதிபதியின் விசேட கவனத்தின் கீழ் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு துரித அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.