Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

கல்முனை நகரில் திடீர் பொலிஸ் சோதனை; 50க்கும் அதிகமானோருக்கு சட்ட நடவடிக்கை

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத போதைப்பொருட்கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையானது திங்கட்கிழமை (9) இரவு கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனை நடவடிக்கையில் கல்முனை சவளைக்கடை பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து கொண்டதுடன் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்கள் உட்பட கனரக வாகனங்கள் கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.அத்துடன் வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

மேலும் இரவில் பயணம் மேற்கொள்ளும் கல்முனை கொழும்பு குளீருட்டப்பட்ட பேரூந்துகளின் வழித்தடை பரிசோதனை குறித்த பேரூந்தில் சோதனை என்பன முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாக செல்வது மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.

இதே வேளை பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும் நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் உயிரிழப்பு!

October 29, 2026
வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு
செய்திகள்

வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு

October 29, 2026
முல்லைத்தீவில் காணாமல் போன 3 மீனவர்கள்; தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

முல்லைத்தீவில் காணாமல் போன 3 மீனவர்கள்; தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை!

October 29, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

October 29, 2026
ஹோமாகம பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்!

October 29, 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!
செய்திகள்

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்; 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீக்கம்!

October 29, 2026
Next Post
சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு