Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து. யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர், சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர், அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார்.

அதனை அடுத்து, வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அதே நேரம், காரினை வாடகைக்கு பெற்றவர். யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில், அடமானம் வைத்த கார், நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் . கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த, காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர், பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார்.

காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு