Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

சட்டத்தரணி படுகொலை விசாரணைகள் தீவிரம்; அமைச்சர் ஆனந்த விஜேபால

5 months ago
in செய்திகள்

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தான் பதவி விலகப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள பதவி விலகல் கோரிக்கை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சட்டத்தரணி ஒருவரது படுகொலை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டவுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தற்போதைய நிலையில், உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த காலங்களில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியவர்களே இன்று எம் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.

எமது ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுகின்றன. இந்த விசாரணைகளின் முடிவில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது நாட்டுக்குத் தெரியவரும்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது அரசின் முதன்மைப் பொறுப்பு. பழைய அரசியல் கலாசாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காகவோ அல்லது அரசியல் இலாபம் தேடும் கோரிக்கைகளுக்காகவோ நான் பதவி விலகப்போவதில்லை.

சட்டத்தரணிகள் உட்பட அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. – என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
Next Post
ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

ஜப்பானில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையம் மீண்டும் இயக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு