‘சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ஒலிப்பதிவுகள் மற்றும் இசை படைப்புகளை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது’ என இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடை விதித்தது.
இளையராஜாவின் இசையில் வெளியான 134 படங்களுக்கு இது பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள பிரபல 15 பாடல்கள்
- செந்தூரப்பூவே…செந்தூரப்பூவே
- என் கண்மணி உன் காதலி
- கோவில் மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ
- செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
- ஆகாய கங்கை… பொன்தேன் மலர் சோலை
- மலர்களில் ஆடும் இளமை புதுமையே
- உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்சு கிளி
- சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
- பொதுவாக என் மனசு தங்கம்
- மடை திறந்து தாவும் நதியலை நான்
- சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
- ராமனின் மோகனம்… ஜானகி மந்திரம்
- அந்தி மழைபொழிகிறது
- தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி








