சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை உடுதும்பர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (01) உடுதும்பர பல்லேகந்த பகுதியில் இடம்பெற்ற சோதனையின்போதே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கஹத்தலியத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்களிடமிருந்த பல அகழ்வாராய்ச்சி உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








