Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகளின் கப்பல்களை அழிக்க தகவல் வழங்கியது சுரேஷ் சலே அல்ல; அலிசப்ரியை சாடும் பொன்சேகா

புலிகளின் கப்பல்களை அழிக்க தகவல் வழங்கியது சுரேஷ் சலே அல்ல; அலிசப்ரியை சாடும் பொன்சேகா

6 months ago
in செய்திகள்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அண்மைக்கால கருத்துக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என அலி சப்ரி தனது முகநூலில் பதிவிட்டிருந்தமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் மற்றும் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கியது பிரிகேடியர் அமல் கருணாசேகர தலைமையிலான குழுவே தவிர, சுரேஷ் சலே அல்ல என சரத் பொன்சேகா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் கவலை தெரிவித்து அலி சப்ரி இட்ட முகநூல் பதிவு, தற்போது அவராலேயே நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் சுரேஷ் சலேயை ஒரு தேசிய வீரராகச் சித்தரிக்க அவர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“யுத்தத்திற்குப் பங்களித்தார்கள் என்பதற்காகக் குற்றங்களிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது” எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் தானும் தனது பாதுகாப்புப் பிரிவினரும் எவ்வாறெல்லாம் பழிவாங்கப்பட்டோம் என்பதை நினைவூட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

“நான் தூக்கியெறியப்பட்டேன். எனது பாதுகாப்பிலிருந்த 17 புலனாய்வு அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்த அலி சப்ரிக்கள் பேசவில்லை. ராஜபக்சாக்களே மூத்த அதிகாரிகளைப் பழிவாங்கினார்கள்.” என்கிறார் சரத் பொன்சேகா.

யுத்த காலத்தில் சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சபையில் இருக்கவில்லை. அவர் அப்போது மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரணவின் கீழ் பணியாற்றிய ஒரு சாதாரண அதிகாரியே. அத்துடன், ‘அரகலய’ போராட்டத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நோக்கி வருவதை முன்கூட்டியே கணிக்கத் தவறியவர் சுரேஷ் சலே என்றும், போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையைச் சூழ்ந்தபோது அவர் அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்ற அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்- என்றார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
உப்புவெளியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி தீக்கிரை

உப்புவெளியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி தீக்கிரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.