Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்; இதுவரை 84 பேரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்பு!

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்; இதுவரை 84 பேரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்பு!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

180 பேர் கொண்ட பணியாளர்களுடன், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்புப் போர்ப் பயிற்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே இக்கப்பல் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளது.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ‘டொர்பிடோ’ (Torpedo) மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துச் செயற்பட்ட ஈரானிய போர்க்கப்பலொன்றை நேற்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்தது. அது டொர்பிடோவைப் பயன்படுத்தி மூழ்கடிக்கப்பட்டது. ஒரு அமைதியான மரணம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டொர்பிடோவைப் பயன்படுத்தி எதிரிக் கப்பலொன்று மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். நாங்கள் வெற்றிபெறவே போரிடுகிறோம். நிச்சயமாக, அழிவுகரமான முறையில், எவ்வித மன்னிப்புமின்றி அமெரிக்கா வெற்றிபெறும்,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எதிரிக் கப்பலொன்றை டொர்பிடோ மூலம் மூழ்கடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் நடத்தப்படும் விதத்தைக் காட்டும் காணொளியொன்றையும் அமெரிக்கா தற்போது வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் மழை

ஊவா மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகல் மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு