Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

நோன்புப் பெருநாளுக்கு பொது விடுமுறை வழங்குமாறு இம்ரான் மகரூப் ஜனாதிபதிக்கு கடிதம்

7 months ago
in செய்திகள்

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும் போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள்.

இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும்.

நாட்காட்டியின் படி சனிக்கிழமை பெருநாள் வந்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக அமைந்து நன்மையளிக்கும்.

இலங்கையின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக இம்ரான் மகரூப் எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்
செய்திகள்

நாளை வரை ஞானசார தேரருக்கு விளக்கமறியல்

October 4, 2026
Next Post
ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் செனட்டில் தோல்வி

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் செனட்டில் தோல்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.