Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“எனக்கு எண்ணெய் கிணறு கிடையாது!”; வெளிப்படையாக பேசிய ஜனாதிபதி

“எனக்கு எண்ணெய் கிணறு கிடையாது!”; வெளிப்படையாக பேசிய ஜனாதிபதி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், எரிசக்தி விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்ததே தவிர, அரசாங்கமோ அல்லது தானோ லாபம் ஈட்டும் நோக்கத்தில் அல்ல என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியிருந்ததாக திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

தான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல என்றும், விலையை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட இலாபம் அடையும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் இந்த எரிசக்தி விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது” எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு மாத காலப்பகுதியில் எரிசக்தி விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

மார்ச் மாத தொடக்கத்தில் 70 டொலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 100 டொலர் வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகப் பாதைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், காப்புறுதி கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் டெண்டர்கள் ரத்து செய்யப்படுதல் போன்ற காரணங்களால் எண்ணெய் சந்தை கடும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டு நிலவிய நெருக்கடியை விட தற்போதைய நிலைமை மாறுபட்டது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போது இலங்கையிடம் 7.2 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார். எனவே, எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாமை என்ற பிரச்சினை தற்போது எழவில்லை என்றும், ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகளினாலேயே நிகழும் என்றும் அவர் விளக்கினார்.

எரிபொருள் விலையில் ஏற்படும் சிறிய மாற்றங்களின் போது கூட, மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டு எரிபொருளை சேமித்து வைக்க முற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். உதாரணமாக, மார்ச் 1ஆம் திகதி 4,500 கிலோலீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதியாகும் போது 10,500 கிலோலீட்டராக அதிகரித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.ஜனாதிபதி அறிவிப்புகள்

இவ்வாறான நிலைமைகளை முகாமைத்துவம் செய்ய வேண்டுமாயின், மக்கள் தமது நுகர்வு முறைகளில் சில மாற்றங்களைச் செய்து நிதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மேலதிகமாக வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%
உலக செய்திகள்

அமெரிக்காவால் 60 நாடுகளுக்கு புதிய வரி; இலங்கைக்கு 10%, ஜப்பான்–அவுஸ்திரேலியாவுக்கு 12.5%

July 24, 2026
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
Next Post
நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

நாட்டில் எலிக்காய்ச்சல் எச்சரிக்கை; 300 பேர் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.