மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 9% ஆல் மசகு எண்ணெயில் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
எண்ணெய் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் எதிரொலியாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








